Monday, June 24, 2013

 Paper Boat 

Nirmalavasan's art work shop 18. 12. 2010

 






 

  வடக்கில் இறுதி யுத்தம் நடைபெற்ற சூழலில்  இருந்து வருகைதந்த முன்பள்ளி ஆசிரியர்களுடன் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் ஒளிப்படங்கள் இவை
 சிறுவர்களுக்கு கற்பிப்பவர்கள், சிறுவர் இலக்கியம், சிறுவர் ஓவியம் தொடர்பாக கதைப்பவர்களுக்கான அடிப்படைத்தகுதி சிறுவர் உலகத்தை ஏற்கவும், அவ் உலகத்தில் வாழவும் விருப்பமுள்ளவராக இருக்கவேண்டும் என நம்புகின்றேன். ஓறிகாமி எமக்கு தெரியுமோ இல்லையோ நம் எல்லோருக்கு கடதாசித்தோணி செய்யத்தெரியும் கடதாசித்தோணிகளை நீரில் ஓடவிட்டு அழகு பார்ப்பது சிறு வயதில் பிடித்தமானது அதுதான் இங்கும் நிகழ்ந்தது ஆனாலும் அவ் முன்பள்ளி ஆசிரியர்களில் பலரை அச்செயற்பாடு மகிழ்விக்கவில்லை காரணம் இறுதி யுத்த சூழலில் தாம் நீர் நிலைகளை கடந்ததையும் தம் உறவுகள், உடமைகளை இழந்ததையும் இச்செயற்பாடு நினைவூட்டியிருந்தது.


 This is  not Kolam





















இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த முன்பள்ளி ஆசிரியர்களுடன் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் புகைப்படங்கள் இவை
கோலம் போடுதல் ஓவியமாக கருதப்படுவதில்லை. ஆனாலும் சித்திரம் வரையும் திறன் கோலம் போடுதலில் இன்றியமையாதது. இருப்பினும் வீடுகளில் கோலம்போட நாம் ஓவியர்களை தேடுவதில்லை இலகுவாக போட்டு விடுகின்றோம். ஓவியம் எனப்படாததை ஓவியமாக்கல் இங்கு இடம் பெறுகிறது.
கல்வி ஊளவியலில் கட்டுருவாக்க கற்பித்தல் முறை எனப்படுவது அறிந்ததில் இருந்து மெல்ல மெல்ல கற்றல் கற்பித்தலை கட்டி எழுப்புதல் ஆகும் கோலம் போடும் அடிப்படை திறனைக்கொண்ட  முன்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு ஓவிம், ஓவியத்தின் வித்தியாசம் வித்தியாசம்ன கதை, பாடல், நாடகம் என கற்றல் கற்பித்தலை இச் செயற்பாட்டினூடாக கட்டி எழுப்ப முடிந்தது.